கலியுகத்துக்கு முன்பு பூலோகத்தாரில் அரக்க பேதம் - தேவ பேதம் இருந்தது.
இந்த யுகத்தில் அப்பேதம் இல்லாத மேனி பெற்ற வாழ்வில் உள்ள மானுடர்கள் இடையே நிலவும் பகை இல்லாத வாழ்க்கை களம் செய்வது இந்த யுகத்தின் உயர்ந்த நினைவாகவும் அது சார்ந்த செயலாகவும் அதில் நிலவும் தர்மமாகவும் திகழ்கின்றது.
உயர்ந்த அன்பில் உலகவாழ்வை கட்டமைக்கும் சேவையில் தாவரங்களை நேசிக்கும் நிறைவில் உலகலாவிய அன்பு வளம் செய்வதும்; அத்தாவரங்களிடையே வாழும் ஊர்வனங்கள், நீரினங்கள், மிருகங்கள் அவற்றோடு அன்பு பாராட்டும் நடவடிக்கையோடு, அவற்றுள் அன்பு செழிக்க அவற்றை வாழ்விக்க விரும்பும் நீட்சியில், அதற்கு மேலாக மானுடர் இடையே தூய அன்பு ஊடுருவி உலாவும் வாழ்வியல் அலங்காரம் செய்வதும், மானுட இலட்சியமாகும்.
குடும்பத்துள் நிலை கொள்ளும் அன்பின் பண்புகள், அவ்வாறு மற்றவர் குடும்பத்தோடு அனுசரிக்கும் அன்பு பந்தம். மறு ஊருக்கும் ஊருக்கும் இடையே நிலவும் அன்பு, அண்டை நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையே நிலைநிறுத்தவல்ல ராஜ அன்பு இவை மானுடர்கள் பிரயோகிக்க வேண்டிய அன்பாற்றலின் அன்பின் பிரமாண்டங்களாகும்.