Swamithoppe, Tamil Nadu, India

தவம்

ஒரு உயிர் மாயா பிரபஞ்சத்தை அதன் தர்மங்கள் வழி பரிசித்தும், அப்பரிசத்தை நிறைவாக்கும் சுற்றில் ஆதி அமிர்தப் பிரபஞ்சத்தில் உள்ள தனது தானத்தை அடைந்து அதுவாக உறைவது தவம்.

தவத்தின் விளக்கம்

தவம்

ஒரு உயிர் மாயா பிரபஞ்சத்தை அதன் தர்மங்கள் வழி பரிசித்தும், அப்பரிசத்தை நிறைவாக்கும் சுற்றில் ஆதி அமிர்தப் பிரபஞ்சத்தில் உள்ள தனது தானத்தை அடைந்து அதுவாக உறைவது தவம்.

தவநிலைகள்

இந்தத் தவ உயிர்களுக்கெல்லாம் உதவி வழங்க, உலகினங்களில் கலந்தும், கடந்தும் நிலவும் நிலையிலிருந்து, அவ்வினங்களின் உய்வுக்காக, பிரம்மச் சொரூப மூர்த்தியர் – தேவியரோடு, சங்கமான பரத்தார்கள் தங்களுக்கு எல்லாம் மூலமான பரபிரம்மத்தை நோக்கி நிஷ்டைச் செய்வது மேல் தவம். இத்தகைய ஏக தரத்தில் விளங்கும் தவநிலையின் பிரிவுகளில், உலகியலில் உயிர்களை வாழ்விக்க உதவும் உழைப்பு முதற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தவமாகவே கருதப்படுகின்றன.

சாமானிய உழைப்புகளில் நிலவும் நேர்மை – ஒழுங்கு – நன்மை – நிறைவு இவற்றின் அளவு மிகையால் அவை தவமாகப் பூரணம் அடைகின்றன.

தவசிகள்

சித்தர்கள் – முனிவர்கள் – திருக்கன்னியர் – சன்னியாசிகள் என்று அறியப்படும் தவசிகள், தங்கள் புலன் சக்திகளை அணுவளவில் ஒடுக்கியும், பிரபஞ்ச அளவில் விரித்தும் விளங்கும் முறைத் தேர்ச்சிகளுக்காகவும், இத்தேர்ச்சியால் பரபிரம்மத்தின் அநேக விபூதிகளைப் பொது நலத்துக்கு வழங்கும் தவலோக அதிகாரிகளாக விளங்குகின்றனர்.

ஆதி அமிர்தப் பிரபஞ்சம்

இவற்றுக்கெல்லாம் ஆதியில் அமிர்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு அதன் ஆதி தண்டரளத் தானத்தவரான அம்மைய சக்திச் சொரூபியராக விளங்கிய மூர்த்தியர் - தேவியரின் தவங்கள். அதன் நகலாகத் தோன்றிய மாயா பிரபஞ்சம் சார்ந்து மூர்த்தியர் – தேவியர் மாயா தண்டரள மையங்களைத் தழுவி அதன் மையங்களின் சொரூபியராகத் திரிந்துச் செய்த தவங்கள்.

மேற்படி தவங்கள் – தவச் சொரூபங்கள் ஏற்று பரபிரம்ம வைகுண்டர் செய்த ஏக அநேக தவங்கள் அடங்கிய முத்தண்டரள நிலை தவங்கள் வரை, தவம் அதன் விவரிப்புகளாய் விளங்குகின்றன. இதன் விளக்கங்கள் வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.