அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல் ஆகமங்களின் அடிப்படையில் சகல வேத சாஸ்திர நூல்களை ஆராய்ந்து வேத சாஸ்திர புராணத் தெளிவுகளை ஏற்படுத்தும்.
அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல் ஆகமங்களின் அடிப்படையில் சகல வேத சாஸ்திர நூல்களை ஆராய்ந்து வேத சாஸ்திர புராணத் தெளிவுகளை ஏற்படுத்தும் முதல் நிலை பணியோடு கூடிய நோக்கத்தில், புவியியல் திரிபுகள், உயிரியல் திரிபுகள், வானியல் திரிபுகள், உடலியல் திரிபுகள், மனுநீதத் திரிபுகள், அரசநீதத் திரிபுகள்,தெய்வ நீதத் திரிபுகள், தர்மநீதத் திரிபுகள், வாழ்வியல் திரிபுகள், அறிவியல் திரிபுகள், வேத சாஸ்திரத் திரிபுகள் குறித்த ஆய்வுகளும் இடம் பெற்றுள்ளன.
அய்யா வைகுண்டரின் திருமுறைகளும் ஆகமச் சாரங்களும் ஓயாத பொது விழிப்புணர்வினை பறைசாற்றுகின்றன. ஆகவே அது சார்ந்த சேவைகளை முன்னெடுத்து மூன்று நீதம் சார்ந்த ஆர்வலர்களையும், பெரியோர்களையும் சந்தித்து, அவர்களோடு கலந்தாய்வுகள் மேற்கொள்வது இம்மையத்தின் இரண்டாவது நிலைச் சேவையாக விளங்குகின்றது.
அய்யாவின் தாழக்கிடப்பரைத் தற்காக்கும் தர்மத்தை மேம்படுத்தும் பாதையில், பசியாற்றும் அடிப்படைகளோடு கல்விச் சாலைகள் அமைத்தல், மானுடர் முதலான உயிர்களின் வாழ்வியல் மேம்பாட்டுகான தர்மச் சேவைகள் செய்வது இம்மையத்தின் வளர்ச்சிக்குச் சேரும் வலிமைக்கு ஏற்ப செயலாற்றும், மூன்றாவது நிலைச் சேவைக்கான நோக்கம் ஆகும்.
ஒருபுத்தி எனும் பிரணவ மேம்பாடுக்குரிய குருபுத்திகள், உயிர்களுக்கான தர்ம யோகமாக விளங்குகின்றது. இந்த யோகதின் விளக்கங்களும் பயிற்சிகளும் புதுமை வாய்ந்தவையாகும். அதற்குரிய தியான மையங்கள் அமைத்து சேவைச் செய்வதோடு, ஆலய பணிவிடையாளருக்கான பயிற்சிகளும், தேர்ச்சி விகித்த்துக்கு ஏற்ப விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது ஐந்தாவது நோக்காமாக விளங்குகின்றது.