திருவருள் மூலமாக விளங்கும் யாவும் இனிமம் என்று பொருள்படுகின்றன.
திருவருள் மூலமாக விளங்கும் யாவும் இனிமம் என்று பொருள்படுகின்றன. இது தர்ம இன்ப மூலமாக விளங்குவதாக அய்யா வழிபாட்டியல் விவரிக்கின்றது. தர்மச் சாயலுடைய அய்யா ஆலய வழிபாட்டுக்கு வலிமை சேர்க்கும் எக்காரியம் செய்தாலும், அதைச் செய்தவருக்கு ஆலயப் பணிவிடையாளர்கள் வழங்கும் முத்திரிப் பிரிவாக இனிமத் திருமுறை உள்ளது.
பக்தர்கள் தாங்கள் முயற்சிக்கும் தர்மச் சேவையை ஏற்றுப் பரிபாலிக்க அய்யாவை அழைக்கும் முறை நிகழ்த்துவதில், வெற்றிலைப் பாக்கு, ராஜ கனி (எலுமிச்சங்கனி), அண்டக்கனி (தேங்காய்), மேலும் மங்களச் சுவையோடு மணமுடைய கனிகள், மலர்களைத் தாம்பாளத் தட்டில் வைத்து சுருள் கொடுப்பத்தை ஏற்று, அதில் பொது தர்மத்துக்கான பங்கினை ஆலய நிர்வாகப் பிரிவில் சேர்த்துவிட்டு, அய்யா தனது திருவருள்ச் சாரம் நிரம்பிய அதேப் பொருள்களை அளவுக்கு அளவு வைத்து முத்திரித்துப் பக்தருக்கு வழங்கும் ஒழுங்கில் திரு இனிமம் வழங்குவது வழக்கத்தில் உள்ளன.
இவ்வாறு பக்தர்கள் பெற்ற இனிமப் பொருள்களில் திருமண் முத்திரையைச் சேமித்து வைத்து நெடியப் பயன்பாட்டுக்கு வைத்திருப்பர். மற்றப் பொருள்களை மிக ஆச்சாரத்துடன் நோக்கச் சித்திக்கக் கருதிப் புசிப்பார்கள்.