Swamithoppe, Tamil Nadu, India

சோபனம்

மங்களகரங்கள் அனைத்தும் சோபனம் ஆகின்றன.

சோபனத்தின் விளக்கம்

சோபனம்

மங்களகரங்கள் அனைத்தும் சோபனம் ஆகின்றன. உலகியலின் மங்களகரங்கள் அனைத்தும் சொரூப சக்தி ஏற்றங்கள் வாயிலாகவே விளக்கமாகின்றன. உற்பத்தியைப் பற்றித் தொடரும் சோபனங்கள், விதை முளை விடும்போது உணரப்பெறும் பால சோபனம், விருட்சம் பூக்கும் போதும், காய் கனியாகி விதையாகத் திரியும்போதும் அதன் சோபன நிலைகளாக விளங்குகின்றன.

செயல் மற்றும் நன்மை

ஒரு செயல் அதற்கான நன்மையை ஈட்டும்போது சோபனமாகிறது. கலியுகத்தில் சுதந்திரச் சோபனத்துக்குரிய இருவேறு கள நிலைகள் உருவானது.

அரக்கர்கள் மற்றும் தேவச் சொரூபங்கள்

அது அரக்கர்கள் விரும்பிய தேவச் சொரூபச் சக்திகளைப் பிறவியால் பெற்றுச் சிறந்த பிரபஞ்ச அளவிலாவியச் சுதந்திர சோபனங்கள், இதன் இறங்கு நிலையோடு பரத்தார்கள் தங்கள் சொரூபச் சக்திகளை மீட்டெடுத்து வாழ உலகில் பிறவி கொண்ட சுதந்திரச் சோபனங்கள் என்பன.

சோபன முடிவுகள்

இதில் அரக்கச் சோபன முடிவுகள் அவர்களுக்குப் பிறவியற்றுப்போகும் நிறைவை வழங்கியது. அரக்கர் மேவியச் சொரூப சக்திகளுக்கு உரிமையாளரான பரத்தார்கள் அடைந்த சோபனங்கள் பிறவாமல் வாழும் விதி நிறைவுகளை வழங்கின.

பரபிரம்மம்

இவற்றில் அய்யா வைகுண்டர் பிரபஞ்சத்தில் நிலைக்கச் செய்யும் சோபனம், மகா சோபனப் பொருளானப் பரபிரம்மம் பூமியில் மங்கள நாதனாக விளங்கும் காலத்திலிருந்து, பரநிலைகளுக்கு எல்லாம் அவற்றின் மேல்ப்பொருளாகி விளங்கியப் பிரம்மாந்தரம் போல், இக நிலையில் ஸ்திரமாகும் பரபிரம்மப் பிரம்மாந்தரம் நிறைவுகள் உடையதாகும்.

பஞ்ச மூர்த்தியர்

இதனால் பஞ்ச மூர்த்தியர் பிரிவான பஞ்ச தேவர்கள் (சுடலை நாதன் - அக்கியேறி – மாயப்பலவேஷம் – அத்திவாக்கன் – காத்தவராயன்) அரம்பைக் கன்னியர்கள் முதல் சிவன் – உமையவள், நாராயணர் – மகாலட்சுமி, பிரம்மா – சரஸ்வதி இவர்களின் அவதாரங்களும், பத்திரமாகாளி, முருகப்பெருமான் – வள்ளி, தெய்வானை, ஆனைமுகன் – வாசவர்கள், தாணுமாலையன் – குமரி பகவதி, பூமாதேவி – தேவ சங்கத்தார் சோபனம் அடைந்த புராணங்கள் உள்ளன.

இவற்றின் விளக்கங்கள் வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.