அன்பின் இடப் பெயர்ச்சிகள் எங்கும் பக்தியின் தொடர்புகள் உருவாகின்றன.
அன்பின் பரிவர்த்தனைகள் அனைத்தும் பக்தி ஆகின்றன. அன்பின் இடப் பெயர்ச்சிகள் எங்கும் பக்தியின் தொடர்புகள் உருவாகின்றன. பக்தனின் மனம் எதனைப் பற்றுகிறதோ அங்கெல்லாம் தெய்வம் அடைந்துள்ள சொரூப சக்திகளைப் பக்தனுக்கு வெளிச்சமாக்கி, தெய்வங்கள் பக்தனைத் தமது சொரூபக் களத்திலேயே உலாவச் செய்கிறது.
இதனால் பக்தன் செம்மையுள்ளவனாக விளங்குகின்றான். அவனை அணுகிப் பார்த்தால் அவனிடம் பதிபக்தி – தேச பக்தி – பிரம்ம பக்தியும் அதன் நெறிகளும் வெளிச்சமாகின்றன.
இவ்வெளிச்சங்களைப் பெருக்காத பக்தி, மெய்யான பக்தி அல்ல.
என்று சிவகாண்ட அதிகாரம் பக்தியின் ஒளிச் சுற்றினைக் குறித்துக் கூறுகிறது.
பக்தி மானுடரை முத்தினைப்போல் ஒளியேற்றம் அடையச் செய்கிறது. பக்தி பிறக்கும் இடமெல்லாம் ஒளிமூலப்பொருளான பரபிரம்மம் தங்குமிடமாக்கிக்கொள்கிறார்.
முக்திப் பொருளானப் பரபிரம்மம் வீடுகொள்வதால் பக்தன் வீடுபேறுக்குப் பாத்திரராகின்றான். இவ்வாறு அய்யா வைகுண்டரை முக்தியில் காணும் முயற்சிக்கு ஆற்றலாக பக்தி விளங்குகிறது.
இச்சக்தியால் பரபிரம்ம வைகுண்டரைக் காணும் திருமுறையில் வாய்க்கும் தரிசனங்கள் நெடிய அருளானந்தத்தை வழங்க வல்லதாய் உள்ளன.
அதனை காணக் காண ஏற்படும் பரம் சார்ந்த காட்சிகள் என்றும், பக்தனுக்காக அய்யா வேளைக்கு வேளை (நொடிக்கு நொடி) எடுத்தாடும் விதவிதமானச் சொரூபங்கள் என்றும், அந்த அருள்ச்சொரூபச் சக்திகளின் நீட்சியால் நாளுக்கு நாளாக நிகழ்ந்தேறும் அதிசயங்கள் என்றும் அகிலம் விவரிக்கிறது.
இதன் விளக்கங்கள் வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.