Swamithoppe, Tamil Nadu, India

தாங்குமை

பிரபஞ்சத்தின் தாங்கும் மூலமாகப் பரபிரம்மம் விளங்குகிறது. அதுவே ஆதி மகர பரபிரம்ம முகமாக விளங்குகிறது. அதில் இருந்து தோன்றிய இப்பிரபஞ்சம் அடைந்த தாக்கங்களும், அதனால் ஏற்பட்ட திரிபுகளும் குறித்த விவரிப்புகள், இப்போது பிரபஞ்சத்தைத் தாங்கும் பிரம்ம நிலையை அறிய உதவுகின்றன.

குறோணி என்ற ஆதி அரக்கன் ஆதி அமிர்தப் பிரபஞ்சத்தை விழுங்கினான். அவனில் அடங்கிப்போனப் பிரபஞ்சத்தைத் திருப்பி, முன்புபோல் பிரபஞ்சத்தை இயக்கி வாழ்விக்க, நாராயணர் சுறோணித மாயனாக மகா விஸ்வரூப அவதாரம் புரிந்து குறோணியை ஆறு கூறாக அழித்தச் சுற்றில் பிரபஞ்சத்தை இயக்கும் மாயா மகரப் பரபிரம்ம முகமாக விளங்கினார்.

குறோணியின் ஆறு கூறுகள் ஒன்றின் ஒன்றாக உலகில் அநேக உயிர்களாய்த் தோன்றி வாழ்ந்து முடியும் நீட்சியில், ஆறாவது துண்டத்தில் அரக்கன் தன்னைத்தானே பிறப்பித்தச் சுற்றில் பிரபஞ்சத்தைத் தனதாக்கிய ஆதிக்க நீட்சியில் ஆதி மகர பரபிரம்ம முகமும், மாயா மகர பரபிரம்ம முகத்தின் வெளி வாசல்கள் அனைத்தும் அடைந்துபோயின. அதனால் இகத்தாரும் – பரத்தாரும், அவர்களின் அம்சப் பிரமாண்டமான பிரபஞ்சமும் பரபிரம்மசமின்றித் தன்னால் நொடியில் அழியும் அபாயம் சூழ்ந்தது. இந்த பொது அபாயத்தில் இருந்து பிரபஞ்சம் காக்க நாராயணர் வைகுண்ட அவதாரம் புரியலானார்.

வைகுண்ட அவதார முகூர்த்தத்துக்காக, மகாலட்சுமியைப் பிரபஞ்சத்தின் பெண்பால் சொரூபங்கள் அடங்கிய விஸ்வரூபப் பொன்மகரமாக வளர வைத்தார். நாராயணர் பிரபஞ்ச அளவிலாவிய ஆண்பால்ச் சொரூபங்களை எல்லாம் அடக்கிய விஸ்வரூப அவதாரம் பிரிந்து, பிரபஞ்ச ஆதி உற்பத்தித் தொழில் அடங்கிய விந்துவழிச் சுற்றினை பூமியில் அமைக்க, மாமோகச் சக்கரத்தை வீசிய சகலத்தையும் மயக்கியச் சுற்றில், பிரபஞ்சம் எங்கும் பரிவர்த்தனை பிரிந்து பரபிரம்மத்தின் உகர மூலத் திறவினை உருவாக்கி, பரபிரம்மத்தைத் தமது விஸ்வரூபத்தின் வழியே பூமியில் இறக்கி, உகரபிரம்மச் சத்தினைத் தம்மில் இறக்கி பாலன் வடிவம்கொள்ளச் செய்தச் சுற்றில், பிரபஞ்சத்தில் ஏகாய நிலையிலும், ஆகாய நிலையிலும், உயிர்களின் தேகாய நிலைகளிலும், உகரபிரம்ம சத்தினை நிறைத்தார். பிரம்ம சத்தினை சகல உயிர்களிலும் இறக்கிய தர்மப் பரிபாலிப்பில் தெள்ளு வரிசையில் உள்ள உயிர்கள், மானுடர் முதல் பிரபஞ்சத்தின் சகலமும் அபயத்தில் இருந்து தற்காக்கப்படும், ஏக அநேகத் தாங்குமையை (தாங்கல் – இணைத்தாங்கள்) தரித்து அவதார முகூர்த்தத்தை நிறைவு செய்தார். இதன் விளக்கங்கள் வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.