Swamithoppe, Tamil Nadu, India

தாண்டவம்

பிரபஞ்ச விதித் திரிபுகளை உருவாக்கும் அலைமய சுழிகள் உருவாக்குபவை தாண்டவம் ஆகும்.

தாண்டவத்தின் விளக்கம்

தாண்டவம்

பிரபஞ்ச விதித் திரிபுகளை உருவாக்கும் அலைமய சுழிகள் உருவாக்குபவை தாண்டவம் ஆகும்.

ஜீவனின் இயக்கமாக அதற்கு இசைந்த புற நிலைகளின் இயக்கங்கள் சிவனின் பொது நடனம் என்று வேதங்கள் விவரிக்கின்றன. இத்தகைய இயல்பான இயக்கங்களைப் பொதுவாகத் திரிக்க வல்ல மகாத் தாண்டவங்களைச் சிவம் ஆடியுள்ளார்.

அகிலம் அரநடனம்

இவற்றை அகிலம் அரநடனம் – திருநடனம் என்று விவரிக்கிறது. சிவத்தின் அரநடனத்தால் மாயாப் பிரபஞ்சம் உருவானது, திருநடனத்தால் மாயாப் பிரபஞ்சம் அழிந்து போகிறது.

அமிர்தப் பிரபஞ்சம்

இந்நடன பலனால் அமிர்தப் பிரபஞ்சம் வெளிச்சமாகிறது. மாயா பிரபஞ்சத் தோற்ற விதிகள் நம்மைப் பற்றியுள்ள சாகும் வாழ்வின் கட்டமைப்பினை விவரிக்கின்றன.

சாகா வாழ்வு

அமிர்தப் பிரபஞ்சத் தோற்ற விதிகள் நாம் சாகா வாழ்வில் இருந்ததையும், மேலும் நமக்கு அவ்வாழ்வு வாய்ப்பதையும் குறித்து விவரிக்கின்றன.

சிவ நிலைமைகள்

இத்தாண்டவங்கள் வாயிலாக மாறும் சிவ நிலைமைகள், சிவத்தின் சீவப் பிரிவாகிய உயிர்களின் மாற்றங்கள், இவை மிகுந்த ஆச்சரியங்களையும் ஆனந்தத்தையும் நீட்சி பெறச் செய்கின்றன.

இத்தகையத் தாண்டவ விளைவுகள் குறித்த விளக்கங்களை வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.