Swamithoppe, Tamil Nadu, India

வழிபாடு

உற்பத்தி மூலத்தை நோக்கி மேலும் மேம்பாடு கோரும் முறைகள் எல்லாம் வழிபாடு மயமாகின்றன.

வழிபாடு

உற்பத்தி மூலத்தை நோக்கி மேலும் மேம்பாடு கோரும் முறைகள் எல்லாம் வழிபாடு மயமாகின்றன. புராணங்கள் கூறும் அவதாரங்கள் அனைத்தும் காலாகாலமாக உயிர்களின் விதவிதமான தேர்ச்சிகளுக்குரியதாகத் திகழ்கின்றன. அவற்றை அணுகுவதற்குரிய வழிபாட்டுத் திருமுறைகள் எல்லாம் ஜீவரின் ஜீவனுக்கும் ஜீவித்தத்துக்கும் இயற்கையோடு இசைந்த சக்திகளை வழங்குகின்றன.

அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்டரின் அவதார முகூர்த்தம் பிரபஞ்சத்தின் முக்கால நிலைகளைத் திருப்பி இலங்குச் செய்யும், சிவஞான வேத சக்தியின் விஸ்வ மகா சக்திச் சுற்றுகள் உடையதாய் திகழ்ந்ததில், இருந்து முக்கால பலன் சேர்க்கும் திருமுறைகள் உடையதாக அய்யா வைகுண்டர் அருளாட்சி விளங்குகிறது.

வேத சக்தி

இம்முகூர்த்தம் பரம்பெரிய வேத சக்திச் சுற்றோடு நிகழ்ந்தேறியது. அதனால் கலி அரக்கர்கள் வேத சாஸ்திர புராணங்களை வேறுதிரித்து ஆதிக்கம் பெருக்கியதால், கூறழிந்து சக்தியிழந்துபோன நான்கு வேதங்களின் அநேகப் பிரிவுகளும், அடங்கிய சதிர் மறைகளைத் தழுவி, கலியுகத்துக்கு முன்புத் திருவருள் புரிந்த தெய்வங்கள் எல்லாம் தங்கள் பக்தர்களை அணுகுவதற்குரிய சுதந்திரத் தளமாக அய்யாவின் பரம்பெரிய வேத வழிபாடுகள் திகழ்கின்றன.

அவதாரங்கள்

அய்யாவின் இத்திருமுறைகள், பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள சகல அவதாரங்களின் திருநாமச் சொரூபத்தையும் தரிசிக்க வல்ல, பரபிரம்மத்தின் ஏக அநேக நிலைகள் இலங்கும் திருவருட் கருவூலமாக விளங்குகிறது.

சுதந்திர வேத வழிபாடு

ஆகையால் மானுடர்கள் பக்தி செய்யும் தெய்வங்களின் நல்லருளைப் பெறுவதற்கு எல்லோருக்கும் பொருந்தும் சுதந்திர வேத வழிபாடாக அய்யா வைகுண்டரின் தர்மத்திரு வழிபாடு விளங்குகிறது.

அதன் விளக்கங்கள் வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது.