பிறகு குறோணியின் இரண்டாவது துண்டத்தின் உயிர்கள் தோன்றி வாழ்ந்த காலம் நெடிய யுகமாகியது. இதில் தில்லை மல்லாலன் - மல்லோசி வாகனன் என்ற இரு சூரத்தலைவர்களும், செதிலில் இருந்து தோன்றிப் பெருகிய செதிர் சூர வம்சங்களும் பூமியில் அமைந்த சிவ ராஜியக் கட்டமைப்பின் கீழ் வாழ்ந்திருந்தனர். பூமியின் முதல் ராஜியக் கட்டமைப்புகளை வகுத்து, சிவம் முதலான பார்த்தார்கள் முதலில் அரக்கரை வாழவைக்கும் ராஜியத்துக்கான சகலச் சேவைகளையும் செய்திருந்தனர். இதனால் சிறந்து வாழ்ந்த இரு சூரரிடையே பகை உருவானது. அந்தப் பகையின் உச்ச மோதலின் காரணமாக, பரத்தாரின் ராஜியச் சேவைகள் முடங்கின. சூரத் தலைவர்கள் யாருடையப் பக்கம் ராஜிய சேவை செய்வதென்று அறிய முடியாமல் நசுங்கிய பரத்தாரைக் காக்க, நாராயணர் பங்காயக் கண் மாயனாக அவதாரம் புரிந்து சூரரை அழித்து பாரத்தாரைக் காத்திட்ட நிகழ்வோடு நெடிய யுகக் கால நிகழ்வுகள் நிறைவேறியது.