மானுடரின் அறிவால் உணரப்படும் காலம் குறோணி என்ற ஆதி அரக்கனில் இருந்து தோன்றியது. இந்தக் காலச் சுற்றுக்குப் பிரபஞ்சம் முழுமையாக வயப்படுவதற்கு ஏற்ப குறோணி பிரபஞ்சத்தை விழுங்கியதும், அவனில் அடங்கிய பிரபஞ்ச அங்கங்கள் நாராயணரின் சுரோணித மாயன் அவதாரமும் – குறோணி அரக்க சக்தியும் மேதிய சங்காரத் தாக்கத்தோடு மீண்டும் சுற்றத் தொடங்கிய பிரபஞ்ச அங்கங்கள் அப்போதிலிருந்தே அரக்க சக்திக்கும் – தேவ சக்திக்கும் ஏற்பட்ட மோதல்களின் தாக்கங்களுக்கு வயப்பட்டுள்ளன.
அதற்கு எல்லாம் ஆதியானத் தாக்கம், குறோணி வாழும் முறையுள் பிரபஞ்சம் அவனுள் அடங்கி, அவன் மரணத்தால் அவனிடமிருந்து பிரபஞ்சம் விடுபட்டு இயங்கியதால், அதன் சாயலில் பிரபஞ்ச சக்திகளை உட்கொள்வது பிறப்பு - வாழ்வு என்றும், அச்சக்திக் கோர்வை திரிந்து பிரிவதை மரணம் என்ற ஆயுள் கணக்கீடுகள் உடைய சாகும் வாழ்வாதாரம் உருவானது.
இதனைத் தழுவி நல்ல முகூர்த்தம் – அதம முகூர்த்தம் என்ற இருவினைக்குரியக் கால பேதம் ஏற்பட்டது. இந்தக் கால பேதம் பிரபஞ்சம் சுத்த (சுரோதமாயன்) மாயை – துஷ்ட (குறோணி) மாயை என்ற இருவேறு ஈர்ப்புக்கு வயப்பட்டு அதன் இயல்பான சுற்றுக்குச் செல்ல முடியாமல் சரிவான சுற்று அடைந்துள்ளதை வெளிச்சமாக்குகிறது.
இத்தகைய சாய்வான சுற்றுக்கு ஏழு யுகமாக வயப்பட்டப் பிரபஞ்சம் ஆதி நிலைக்குத் திருப்ப வல்ல முகூர்த்தம் கொல்லம் ஆண்டு 1008, மாசி மாதம் 19 ஆம் தேதியில் ஏற்பட்டது.
இந்தக் முகூர்த்த விதிப்படி பிரபஞ்சம் அடைய உள்ள சேமங்களை ஆகம உரையாகக் கூறப்பட்ட முகூர்த்தம் கயிலையில் கொல்லம் ஆண்டு 1016 – கார்த்திகை மாதம் 27 ஆம் தேதியில் ஏற்பட்டது.
பிரபஞ்சத்தைத் திரிக்க வல்ல முகூர்த்த சக்தி பூமியில் இறங்கி பதினெட்டு ஆண்டுகள் இருந்து அதற்கான யாமங்களை நிறைவேற்றியது. பிறகு அந்த யாமக் கட்டமைப்புகள்படி பிரபஞ்சத்தைத் திரிக்கும் ஆளுயாற்ற ஏகாபர தானமான வான் வைகுண்டத்துக்கு அச்சக்தியானது புறப்பாடாகிய முகூர்த்தம் கொல்லம் ஆண்டு 1026 – வைகாசி மாதம் 21 ஆம் தேதியில் ஏற்பட்டது.
இம் மகா முகூர்த்தங்களின் பலன்கள் மானுடர் உணரும் விளைவுகள் உருவாகும் தருணத்துக்குரிய முகூர்த்தத்துக்கு 675 ஆண்டுகள் உள்ளதாகச் சிவகாண்டம் கூறுகிறது.