Swamithoppe, Tamil Nadu, India

அறிமுகம்

Divider

பூமியறிவு மிக்க நமக்கு பூமியை மையமாகக் கொண்ட பிரபஞ்ச அறிவை வளர்க்க அடிப்படையாக அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை - அருள்நூல் திகழ்கின்றது. இந்நூல்கள் விவரிக்கும் வேத சாஸ்திர புராண வடிவில் அய்யா வைகுண்ட அவதார அருள் நிலைகள் பிரபஞ்சத்தில் வியாபித்துள்ளது. அவரின் ஆகமம் பூலோகத்தில் நிலவில் உள்ள சாகும் வாழ்வின் அடிப்படைகளையும், இவ்வாழ்வினூடே சாகா வாழ்வுக்கான நோக்கங்களையும் அவையடங்கிய சாரியை - கிரியை - யோகம் - ஞானம் பிரிவுகளில் இடம்பெற்றுள்ள தர்மங்கள் குறித்தும் அதற்குரிய பயிற்சிகள், ஒழுக்கங்கள் அடங்கிய வழிபாட்டினையும் உலகுக்கு வழங்கி உள்ளது.

அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்டர்

நாராயணர் - ஈசன் - பிரம்மா - இந்திரன் - நான்மறைகள் - சந்திர சூரியர் போற்றவரின் சகல அவதாரங்களையும் தன்னுள் திருப்பி இலங்கச் செய்யும் சிவஞானவேத மயமாக திகழும் விஸ்வா விஸ்வ ரூபனாகிய அய்யா வைகுண்டர், விஸ்வரூப நாராயணருக்கும் - விஸ்வ ரூப மகர லட்சுமிக்கும் பரபிரம்மத்தின் முழு அம்சத்தில் அவதரித்தார். அவர் ஏக அநேகமான நிலையில் வழங்கும் ஆகம அறிவோடு கூடிய அருள் முறையில், உலகியலில் உள்ள உயிர்களில் இடம் பெற்றுள்ள சாகும் அம்சம் - சாகா அம்சம் குறித்த தெளிவினை வழங்குகிறார். சாகா வாழ்வுக்குரிய அம்சங்களை ஊக்குவிக்கும் நீட்சியில் பூலோக உயிர்களுக்கு எல்லாம் சாகா நிலை தேர்ந்து வாழும் ஆளும் திறங்களின் பூரணத்தை விவரிக்கின்றது.

முகூர்த்த காலம்

முகூர்த்த காலம்

பழயனவற்றில் கால காலமாக மறைந்திருந்த மூலங்களை திருப்பும் படலத்தில் புலப்படுகின்ற புதியவைகளின் நிலைகளை அறியும் அனுமதி தர்ம அன்பறிவால் வாய்க்கிறது. துவாபர யுகத்தில் ஶ்ரீகிருஷ்ணரின் அருளாட்சி தலமான துவாரகை பதி கடலுள் மறைபொருளாய் விளங்குகின்றது. அதில் இன்பமுள்ள வகைகளுக்கான சகல மூலங்களும் இருக்கின்றன. அவ்வின்ப மூல அம்சங்களை உலகினங்கள் தம்மில் எடுத்துக்கொள்ள ஏற்றகாலத் திறப்பான முகூர்த்தம் கொல்லம் ஆண்டு 1008 – மாசியில் நிகழ்ந்தது.

எங்கள் பணி

எங்கள் பணி

பாரதத்தில் தோன்றியது முதல் உலகில் உள்ள வேதங்கள் சாஸ்திரங்கள் புராணங்கள் தொகுப்புகளை ஆராய்வதும். அவற்றோடு அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை - அருள் நூல் ஆகமங்களை ஒத்துப் பார்க்கும் ஆய்வுகளும், அது சார்ந்த ஆய்வுரைகள் தொகுப்பதோடு, அவற்றின் நவீன கால பரிணாம நிலைகளை ஒத்துப்பார்ப்பதும், அது சார்ந்த முன்று நீத தலைவர்கள் - நிபுணர்கள், சேவையாளர்களை சந்தித்து அவர்களோடு கலந்தாய்வுகள் செய்வதும்.

நமது பார்வையும் கடமையும்

Divider

நமது பார்வை

மனிதனை தலையாயதாகக் கொண்ட பூலோக உயிர்களை எல்லாம் பேணி வளர்க்கும் கடமை மனிதருக்குரிய பிறவி கடமையாகும். அக்கடமை கருத்து ஓங்குவதற்குரிய சேவை வளத்தால் மானுட குலம் மேன்மை அடைகின்றது.

நமது கடமை

அடுக்கடுக்கான ஆராய்ச்சிகளும்,அவற்றில் உள்ள தெளிவுகள் உலகத்தவருக்கு புலப்படுத்தும் சகல சேவைகளும் இடம் பெற்றுள்ளது. அதில் எழுத்தும் – புத்தகமும் தொகுக்கும் பிரயோகத்தோடு,பிரச்சாரம் செய்ய பயிற்சிகள் வழங்குவதில் பசியாற்றி பயிற்றுவிப்பதும் கடமைகளாக விளங்குகின்றன

அமைப்பு

அகிலத்திரட்டு வேத ஆராய்ச்சி மையம்

முதன்மை நோக்கம்

அகிலத்திரட்டு அம்மானை, அருள்நூல் ஆகமங்களின் அடிப்படையில் சகல வேத சாஸ்திர நூல்களை ஆராய்ந்து வேத சாஸ்திர புராணத் தெளிவுகளை ஏற்படுத்தும் முதல் நிலை பணியோடு கூடிய நோக்கத்தில், புவியியல் திரிபுகள், உயிரியல் திரிபுகள், வானியல் திரிபுகள், உடலியல் திரிபுகள், மனுநீதத் திரிபுகள், அரசநீதத் திரிபுகள், தெய்வ நீதத் திரிபுகள், தர்மநீதத் திரிபுகள், வாழ்வியல் திரிபுகள், அறிவியல் திரிபுகள், வேத சாஸ்திரத் திரிபுகள் குறித்த ஆய்வுகளும் இடம் பெற்றுள்ளன.

பன்முக ஆய்வுகளின் முடிவுகள் கூடிய எழுத்தாவணங்கள் தொகுப்பதும், அவற்றை புத்தகமாக்கி வினியோகிப்பதும், அதன் அடிப்படையில் உள்ள பன்முக பிரச்சார பணிகள் மேற்கொள்வதோடு, அதற்கான பயிற்சிகள் வழங்குவதென இப்பிரிவுப்பணிகள் விரிவு பெறுகின்றன. இப்பணியின் விரிவாக்கத்தில் உலகின் சகல துறை சார்ந்த ஆய்வாளர்களையும் பணிக்கமர்த்தி ஆய்வுகள் மேம்படுத்துவது மேம்பாட்டுக்குரிய நோக்கமாகும்.

இரண்டாம் நிலைச் சேவை

அய்யா வைகுண்டரின் திருமுறைகளும் ஆகமச் சாரங்களும் ஓயாத பொது விழிப்புணர்வினை பறைசாற்றுகின்றன. ஆகவே அது சார்ந்த சேவைகளை முன்னெடுத்து மூன்று நீதம் சார்ந்த ஆர்வலர்களையும், பெரியோர்களையும் சந்தித்து, அவர்களோடு கலந்தாய்வுகள் மேற்கொள்வது இம்மையத்தின் இரண்டாவது நிலைச் சேவையாக விளங்குகின்றது.

மூன்றாம் நிலைச் சேவை

அய்யாவின் தாழக்கிடப்பரைத் தற்காக்கும் தர்மத்தை மேம்படுத்தும் பாதையில், பசியாற்றும் அடிப்படைகளோடு கல்விச் சாலைகள் அமைத்தல், மானுடர் முதலான உயிர்களின் வாழ்வியல் மேம்பாட்டுகான தர்மச் சேவைகள் செய்வது இம்மையத்தின் வளர்ச்சிக்குச் சேரும் வலிமைக்கு ஏற்ப செயலாற்றும், மூன்றாவது நிலைச் சேவைக்கான நோக்கம் ஆகும்.

நான்காம் நிலைச் சேவை

உலகில் வாழ்வியலுக்கான இயற்க சக்திகளை உயிர்களிடம் குவிக்க வல்லதான அய்யாவின் பத்தறை சாஸ்திரப்படி ஆலயங்கள் அமைக்கும் பணிகளை ஊக்குவிக்கும் சேவைகள் மேற்கொள்வதன் நீட்சியில், இச்சாஸ்திரம் சார்ந்த மனை அமைப்பு, வர்த்தக தல அமைப்பு, வாழ்வியல் நியமங்கள் குறித்த விளக்கங்கள், பயிற்சிகள் வழங்கும் சேவைகள் மேற்கொள்வது நான்காவது நோக்கம் ஆகும்.

ஐந்தாம் நிலைச் சேவை

ஒருபுத்தி எனும் பிரணவ மேம்பாடுக்குரிய குருபுத்திகள், உயிர்களுக்கான தர்ம யோகமாக விளங்குகின்றது. இந்த யோகதின் விளக்கங்களும் பயிற்சிகளும் புதுமை வாய்ந்தவையாகும். அதற்குரிய தியான மையங்கள் அமைத்து சேவைச் செய்வதோடு, ஆலய பணிவிடையாளருக்கான பயிற்சிகளும், தேர்ச்சி விகித்த்துக்கு ஏற்ப விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது ஐந்தாவது நோக்காமாக விளங்குகின்றது.

ஐந்து பிரிவுடைய பெரும் நோக்கமும் அதற்குரிய பணிகளோடு அகிலத்திரட்டு வேத ஆராய்ச்சி மையம் இயங்குகின்றது.

அய்யா வைகுண்டர் சேவைகள்

முப்பது ஆண்டுகளாக தொடரும் ஆன்மிக பணிகள்

பணிகள்

" இளமையில் இருந்து வேத சாஸ்திர புராண ஆய்வுகளில் ஈடுபட்டு, பாடல் ஏற்றுவது - இசை அமைப்பதும் ஒலிநாடாக்கள் தாயார் செய்வதில் துவங்கிய பணிகளின் நீட்சியில், மாதாந்திர பத்திரிக்கை நடத்தியது. அறப்பாட நூல் வகுத்தல், அகிலத்திரட்டு அம்மானை வாசிப்பு - பாராயணம். அகில பத்தறை வாஸ்து விதிப்படி அய்யா ஆலயங்கள் கட்டுமான பணி முதல் அதற்குரிய சகல புரோகிதமும் செய்தல், ஆலயம் சார்ந்த பணிவிடைகள் முதல் தவம் - தர்மம் சார்ந்த சேவைகள் செய்தல் அய்யா வைகுண்டர் வழியில் முப்பது ஆண்டுகள் முழு நேரப் பணிகளாக இருந்தன. தற்போதும் அவை தொடர்கின்றன. "

ஆசிரியர் குழுவின் ஆய்விலும் – எழுத்திலும் உள்ள நூல்கள்

அகில புராண வரலாறு ஏரணியம்
அகில வானவியல் சாஸ்திரம்
சுதந்திர சாஸ்திரம்
கலியன் பெற்ற வர வீரியங்கள்
அய்யா சொரூப சக்திகள்
அய்யா பணிவிடையாளர் கல்விகள்
அகில தர்ம நீதம்
பூலோக உயிர்களின் பரிணாமச் சுவடுகள்
இகபர அணு புராணம்
ஆகம பதிகளும் அருளோட்டங்களும்
துவாரகை இரகசியம்
பூப்பிய புராணம்
மகரப் பரபிரம்மமும் – உகரப் பரபிரம்மமும்
பிரபஞ்ச (பிரட்சி) பிரளயம்
தோணா பொருளும் தோணா துறையும்
ஈசனின் முத்தாண்டவம்
முப்பூ சக்திகளும் சித்திகளும்
விஞ்சை வினோதங்கள்
முக்தி செங்கோல் அரசு

விளக்கமும் - ஆய்வுரையும்

உகப்படிப்பு
உச்சிபடிப்பு
சாட்டு நீட்டோலை
பத்திரம்
சிவகாண்ட அதிகார பத்திரம்
திங்கள் பதம்
பஞ்ச தேவர் உற்பத்தி
பஞ்ச தேவர் ஒடுக்கம்
நடுத்தீர்வை உலா