Swamithoppe, Tamil Nadu, India

சிவ நாராயணர்

ஆதி தவ சந்நியாசியான மகாவிஷ்ணுவின் தவத்தில் தரிசனமான ஆதி சந்நியாசியான சாம்ப சதாசிவரும், இருவரின் தவ நோக்கப் பரிவர்த்தனையைத் தழுவி உருவான மாயா பிரபஞ்சமும் சிவநாராயண ஐக்கிய மையமயமாகும். இந்த மையத்திலிருந்து ஆறு யுக உயிர்கள் தோன்றுவதற்கு, அவ்வுயிர்களுக்கான உடல் உருவங்களை உருவாக்கிய சடாச்சர (சராசரம்) மூலங்கள் அடங்கியது போர்மேனியாகும். இந்தப் போர்மேனியில் ஏழு யுகங்களாகப் பூமியில் பிறந்த மேல் ஏழு உலகத்தார் ஒருங்கிணைந்த விபுசு சூத்திரக் கோத்திரத்தார் சான்றோர்கள் ஆவர்.

அய்யா வைகுண்டர்