ஆதி அமிர்தப் பிரபஞ்சத்தில் சிவம் உயர்ந்த தவம் இருந்து, அத்தவ பலனாகப் பரபிரம்மத்தில் இருந்து ஆதி நாராயணர் தோன்றியதால், நாராயணரைச் சிவநாராயணர் என்று வேதம் குறிப்பிடுகிறது. இதனால் சிவமும் நாராயணரும் ஒன்றுபடும் முகூர்த்த சபைகள் வாயிலாகப் பிரபஞ்சத்துக்கு எப்போதும் நன்மையே தலைப்படும் நிலைமை ஓங்கியது. இதற்குச் சான்றாக மாயா பிரபஞ்ச உற்பத்தி முகூர்த்தங்கள் சான்றாக உள்ளன. சிவமும் நாராயணரும் ஒன்றுபட இயலாமல்ப் போன கலியுக உற்பத்தி முகூர்த்தச் சபையில் சூழ்ந்த சஞ்சலமும், அறிவீனமும் அரக்கன் தன்னால் தோன்ற வைத்த கால நெருக்கடியை உருவாக்கியது. இதனால் தன்னால் தோன்றிய அரக்கனின் உற்பத்தி வீரியத்தால் ஏற்பட்டச் சேதங்கள், சிவநாராயண ஐக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சான்றுகளாக விளங்குகின்றன. சிவ நாராயணப் பிளவினை உருவாக்கிடும் வகையில் நாராயணரின் சொரூபத்தில் ஆதிக்கலியன் தன்னை பிறப்பித்த நீட்சியில், அனைத்துத் தெய்வக் கோத்திரத்திலும் தன்னால் தோன்றிப் பிரபஞ்ச அளவில் சேதத்தை உருவாக்கினான். இந்த அழிவிலிருந்து நல்லினங்களைப் புனர்ப்பிக்க, கலி தோன்றும் முன்பே மாயன் ஒரு உபாயத்தை வகுத்திருந்தார். அது நாராயணர் ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் ஆறு யுகமாக உலகில் தோன்றிய உயிர்களைப் படைத்த சடமும், அவ்வுயிர்களில் அரக்கரை சங்காரம் செய்து தேவரைக் காக்கும் கடமையாற்றிய தெய்வங்களின் போர்மேனி மூலத்தைத் தனதுள் கொண்டிருந்தார். அது பிரபஞ்ச சடாச்சர மூலங்கள் எல்லாம் அடங்கியதாகும். அம்மேனி மூலத்தின் வழி நற்பரத்தாரை எல்லாம் காப்பதற்குரிய உபாயம் ஆகும்.