ஆதி அமிர்தப் பிரபஞ்சத்தில் நிலவிய, அமிர்த வாழ்வுக்கு மாறானச் சாகும் வாழ்வாதாரமுடைய உயிர் மூலத்தை வகுத்த காலம் மாயா பிரபஞ்சத்தின் ஆதி காலச் சுற்றாக விளங்கியது. அந்த ஆதியுகமான நீடிய யுக விளைவின் பிரிவுகள் சதிர் யுகம் – நெடிய யுகம் – கிரேதா யுகம் – திரேதா யுகம் – துவாபர யுகம் என போதம் அடைந்த வாழ்வுகளுக்கு அடிகோலியது. காரணம் ஒரு அரக்க உயிர் பிரபஞ்சம் விழுங்கிய முறையில் வாழ்ந்தது ஆகும். இவ்வாறு அரக்கரால் அபாயம் மேலும் வராமல் தடுக்கவும், அரக்கப் பிறவிகளைக் கழிக்கவும் ஒரு உயிரின் விஸ்வரூப மேனியை ஆறு கூறாகப் பிரித்து, அக்கூறுகள் தோறும் உயிர்களைப் படைத்து, வாழ வைத்து, சாக வைத்த முத்தொழில் மயமாக விளங்கியது. அது அரக்கரிடமிருந்து பிரபஞ்சத்தை வாழ வைக்கும் முயற்சியாக விளங்கியது. ஆனால் ஆதி அரக்கன் குறோணி புறமிருந்து பிரபஞ்சத்தைத் தனது அகத்தில் விழுங்கிய வீரியமாக விளங்கினான். அந்தக் குறோணியின் இறுதியானத் துண்டத்தில் தோன்றிய கலி அரக்கன் அகமிருந்து பிரபஞ்சத்தின் புறம் எல்லாம் விழுங்கிடும் வீரியமாக விளங்கினான். அதுவே கலியின் அதீத நுட்பம் மிக்க வீரியமாகத் திகழ்ந்தது. இந்த உற்பத்தி வடிவில் பெருகியக் கொடுமைகள் கலியுக காலக் கொடுமையாக விளங்கின. இதன் விளக்கங்களை வழங்கும் சேவையில் அகிலாலையா உள்ளது. .