Swamithoppe, Tamil Nadu, India

கலியுகம்

Divider

உற்பத்தி சூத்திரமே நமக்குச் சாமானிய அகநிலையின் அடிப்படையாக விளங்குகிறது. அதன் படைத்தல் முதல் காத்தல், அழித்தல் உற்பத்தி கால விதியமைப்பாகத் திகழ்வதற்கு மேலாக, அருளல், மறைத்தல் என்ற ஐந்தொழிலுக்கும் அகமாக விளங்கும் திறம் எதுவோ அதுவாகவும் கலியுக அரக்கன் விளங்கினான். இதனால் ஐந்தொழில் உடைய மூர்த்திகள் அத்தொழில்களை இழந்திருந்தனர். இவர்கள் கலியுகத்தில் கலிபுருஷனின் ஆதிக்கத்துக்கான தொழில் புரிவதின்றிச் சுயமாக தொழில் புரிய இயலாமல் போனது.

கலி புருஷன் தன்னைத்தானே பிறப்பித்துக் கொண்ட சுய உற்பத்தித் திறத்தால், கலியன் ஏகம் ஒரு பரமான மூர்த்தியின் நிகர் நிலை அடைந்தவனாக விளங்கினான். எப்படிப் படைத்தவனைக் காண்பது அரிதோ, அத்தகைய அரியவனாக ஆதி கலியரக்கன் திகழ்ந்தான். இத்தகைய அரக்க நாயகனுக்குப் படைத்தல் தொழிலுடைய மூர்த்தியர் அவர் சங்கமும், காத்தல் தொழிலுடைய மூர்த்தியர் அவர் சங்கமும், அழித்தல் தொழிலுடைய மூர்த்தியர் அவர் சங்கமும் அடங்கிய மும்மூர்த்தியர் அவரின் சங்கமும், பிரபஞ்ச மயமான தங்கள் பணிகளைச் செய்த காலச் சுழற்சியில், உயிர்கள் எல்லாம் கலிபுருஷனுக்கு வயப்பட்ட சூத்திரத்தில் உடலெடுத்து, உயிர்கள் பிறவிதோறும் அரக்கனுக்கு அடிமைச் செய்தனர். உயிர்களுக்கு உடல் கொடுத்து தனது ஆதிக்கத்தின் கீழ் உயிர்களின் உடலியல் சக்திகளின் பெருங்கூறாகிய பிரபஞ்சத்தை அடக்கி ஆண்டிருந்தான். இதனால் கலியுகத்தில் உடலெடுத்து வாழும் யாராலும் கலியுருஷனின் ஆட்சிச் சுற்று நிலைகளைப் புத்தியால் உணர முடியாத பூரண அடிமைகளாக விளங்கிய காலம் கலியுகம். இதன் விளக்கங்கள் வழங்கும் பணியில் அகிலாலையா உள்ளது.